Shining Like Gold – தங்க மங்கை Women’s Special, Sep 2025

Shining Like Gold – தங்க மங்கை Women’s Special, Sep 2025

கௌரி – கல்வியால் சமூக மாற்றத்தை உருவாக்கும் இளம் முன்னோடி

பெண்கள் வீடு, குடும்பத்தைத் தாண்டி வெளியே வருவது சவாலான ஒன்றாக இருந்தாலும், இன்று பல பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், கிருஷ்ணகிரி – ஒசூரைச் சேர்ந்த கௌரி சமூகசேவை, தொழில், அரசியல் என மூன்று கடினமான துறைகளிலும் தன் தடத்தை பதித்துள்ளார்.

அவர் நடத்தும் அன்பு செய்வோம் அறக்கட்டளை மூலம் நீர்நிலைகள் சுத்தம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பெண்கள் முன்னேற்றம், பள்ளிகளுக்கு உதவிகள் என பல சேவைகள் செய்துவருகிறார். குறிப்பாக ‘பயிலகம்’ திட்டம் மூலம் ஏழை, முதல் தலைமுறை மாணவர்களுக்கு இலவச கல்வி கற்றுத்தருகிறார். கிராமங்கள், மலைவாழ் பகுதிகளில் கல்வி மேம்படுத்த அவர் நேரடியாக களத்தில் பணியாற்றுகிறார்.

கௌரி, சமூக சேவை அரசியல் பக்கபலத்துடனே வலிமையாக இருக்கும் என்பதை உணர்ந்து, திமுக சுற்றுச்சூழல் அமைப்பில் துணை அமைப்பாளராகவும் செயல்படுகிறார். 75வது விடுதலை நாளன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமிருந்து சிறந்த இளைஞர் விருது பெற்றார்.

அவர் நம்பிக்கை:

  • கல்விதான் சமூக முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய ஆயுதம்.

  • பெண்கள் முன்னேற, பெண்களே ஒன்றுக்கொன்று பக்கபலமாக இருக்க வேண்டும்.

  • பெண்கள் நிதி சுதந்திரம் அடைந்தால்தான் உண்மையான மரியாதை கிடைக்கும்.

  • ஆண், பெண் எவராக இருந்தாலும் இலக்கு வைத்து உழைத்தால் சாதிக்கலாம்.

கௌரி சொல்வது போல – “கல்வி என்பது நிலையான செல்வம், வாழ்க்கையை மாற்றும் உண்மையான ஆயுதம்.”



Share :